Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வன்முறை வேண்டாம்: சீனா வலியுறுத்து

In
Updated: 10:03 GMT, May 15, 2018 | Published: 10:03 GMT, May 15, 2018 |
0 Comments
1160
This post was written by : Johnson paiva

அமெரிக்கத் தூதரகத்திற்கு எதிரான போராட்டத்தினைத் தடுப்பதற்காக இஸ்ரேல் வன்முறையினைக் கையாள்வதனை நிறுத்த வேண்டுமென சீனா வலியுத்தியுள்ளது.

பலஸ்தீன இஸ்ரேல் எல்லையான காசாவில் இடம்பெற்றுள்ள வன்முறை தொடர்பாக சீனா தனது தீவிர அக்கறையினைக் காட்டும் விதமாக இஸ்ரேல் தமது கடுமையான வன்முறைப் போக்கினை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதாக இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது.

இந்த வலியுறுத்தலினை சீனாவின் வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் லு கங்க் தெரிவித்துள்ளார். பலஸ்தீன இஸ்ரேல் எல்லையான காசாவில்பலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் 55 க்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்ட நிலையில் 2700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த போராட்டத்தினை பலஸ்தீனிய இஸ்லாமிய குழுவான ஹமாஸ் குழு நடத்தியதாகப் பொறுப்பேற்றுள்ளதென வெள்ளைமாளிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் இது தொடர்பாக இஸ்ரேல் ஜனாதிபதி பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், இஸ்ரேல் படையினர் தமது சுய பாதுகாப்பிற்காகவும் மற்றும் நாட்டின் எல்லைகளை பாதுகாப்பதற்காகவும் மட்டுமே தாக்குதல் நடத்துகின்றனர் என்றார்.

இந்நிலையில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகள் இஸ்ரேல் வன்முறையினை நிறுத்துமாறு கூறியுள்ளன. மேலும் இதனைத் திறனாய்வு செய்த துருக்கி இது ஒரு “படுகொலை” எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg