Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய அரசுடனும் காவிரி தொடர்பில் பேசுவோம்: துணை முதல்வர் உறுதி

In இந்தியா
Updated: 10:38 GMT, May 15, 2018 | Published: 10:38 GMT, May 15, 2018 |
0 Comments
1050
This post was written by : Kemasiya

காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண, கர்நாடகாவின் புதிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோமென, தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக தேர்தலில் காங்கிரஸை பின்தள்ளி பா.ஜ.க வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை)  செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க. விற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் மூலம் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

இந்தியாவை தற்போது ஆளும் பா.ஜ.க. மத்திய அரசின் பதவிக்காலம் நிறைவுக்கு வரவுள்ளது.

இந்நிலையில் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் காலமும் நெருங்கிவிட்டது என்பதால் நடந்து முடிந்த கர்நாடகா தேர்தலின் முடிவு நாடாளுமன்ற தேர்தலின் வாசல்படியாக திகழுமென கருதப்பட்டது.

இவ்வாறான நிலையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.விற்கிடையில், கர்நாடகா தேர்தலில் கடும் போட்டி நிலவியது.

எனினும் இந்தப்போட்டியில் ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தை ஆட்சிசெய்த காங்கிஸை பின்தள்ளி பா.ஜ.க. வெற்றி கண்டுள்ளது.

இருப்பினும் ம.ஜ.த. கட்சியும் சிறிதளவு தொகுதியை வசப்படுத்தியுள்ளதால், குறித்த கட்சியுடன் காங்கிரஸ் இணையும் பட்சத்தில், தற்போது பா.ஜ.க. வசமுள்ள பெரும்பான்மை காங்கிரஸிடம் செல்லும் என்பதே தற்போதைய நிலைவரமாகும்.

இந்நிலையில் கர்நாடகாவில் ஆட்சிக்கு வரும் புதிய அரசிடமும் காவிரி தொடர்பில் வலியுறுத்துவோமென துணை முதல்வர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)