Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

FIFA 2018 ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன – டிவோர்கோவிச்

In உதைப்பந்தாட்டம்
Updated: 12:05 GMT, May 15, 2018 | Published: 12:05 GMT, May 15, 2018 |
0 Comments
1041
This post was written by : Varothayan

பீபா உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் திருவிழா எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

போட்டிகளை நடத்தும் ரஷ்யா உள்ளிட்ட 32 நாடுகள் உலகக் கிண்ணத் தொடரில் மோதவுள்ளன.

இந்நிலையில், முதல் போட்டி ஆரம்பமாக உள்ள நேரம் தொடர்பிலான கவுண்ட்டவுண் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்ப மற்றும் இறுதிப் போட்டிகள் இடம்பெறவுள்ள லுஸ்நிகி விளையாட்டரங்கில், கடந்த வாரம் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

கால்பந்தாட்டத்தை ரஷ்யா நேசிக்கிறது என்ற கருப்பொருளில் பல்வேறு நிகழ்வுகள் ரஷ்யாவில் நடத்தப்படுகின்றன.

போட்டி ஏற்பாடுகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், சில முடிவுறுத்தும் செயற்பாடுகள் மட்டுமே இனி மேற்கொள்ளவுள்ளதாகவும் உலகக் கிண்ண போட்டி ஏற்பாடுகளுக்கான குழுவின் தலைவர் அர்கடி டிவோர்கோவிச் தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண போட்டிகளை நடத்துவதற்கென்றே கட்டி முடிக்கப்பட்ட சில விளையாட்டரங்குகளில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சில அழகுபடுத்தல் செயற்பாடுகள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை போட்டி இடம்பெறவுள்ள 11 நகரங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கும், உலகக் கிண்ணப்போட்டிகள் தொடர்பிலான செயலமர்வுகள் நடத்தப்படுகின்றன.

போட்டிகளை பார்வையிடுவதற்காக பல்வேறு நாடுகளையும் சேர்ந்த ரசிகர்கள் ரஷ்யாவில் திரள்வார்கள் என்பதால், அவர்களை வழிப்படுத்துவதற்கு இந்த பயிற்சிகள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், கால்பந்து விளையாட்டுடன் தொடர்புடைய பிரபலங்களும் மாணவர்களுக்கான செயலமர்வுகள் மற்றும் கண்காட்சி போட்டிகளில் பங்கெடுத்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களுடன் இடம்பெற்ற போட்டியொன்றில், ரஷ்யாவின் முன்னாள் கால்பந்து வீரரும், ரஷ்யாவின் கால்பந்து கழகத்தின் பாகுபாட்டுக்கு எதிரான மேற்பார்வையாளருமான அலெசை ஸ்மெர்டின் பங்கேற்றிருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)