Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

33 கால்பந்து நினைவுச்சின்னங்களை மொஸ்கோவிற்கு அனுப்புகிறது மெக்ஸிக்கோ!

In உதைப்பந்தாட்டம்
Updated: 12:10 GMT, May 15, 2018 | Published: 12:10 GMT, May 15, 2018 |
0 Comments
1038
This post was written by : Varothayan

எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி முதல் ஜூலை 15 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளுக்காக தயார் செய்யப்பட்ட 33 கால்பந்து மாதிரி நினைவுச் சின்னங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

குறித்த நினைவுச் சின்னங்கள் கடந்த ஒரு மாத காலமாக மெக்ஸிக்கோவில் உருவாக்கப்பட்டுள்ளன. பிரமாண்டமான கால்பந்து மாதிரிகளில் மெக்ஸிக்கோவையும், வேறு நாடுகளையும் சேர்ந்த ஓவியர்கள் கால்பந்து போட்டிகளுடன் தொடர்புடைய சித்திரங்களை வரைந்துள்ளனர்.

இந்த நினைவுச் சின்னங்கள் நேற்று மெக்ஸிக்கோவின் செஞ்சதுக்கத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.

இதனை பல நூற்றுக்கணக்கானவர்கள் பார்த்து மகிழ்ந்ததுடன், புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர். இக்கண்காட்சியுடன் இணைந்ததாக இசை நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த 33 பிரமாண்ட பந்துகளில், 32 பந்துகள் இம்முறை உலகக் கிண்ணப்போட்டிகளில் பங்கேற்கும் அணிகள் குறித்தானவையாகவும், எஞ்சிய ஒரு பந்து, எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்தவுள்ள கட்டார் நாட்டை குறிப்பதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மெக்ஸிக்கோவின் ஓவியத்துறையை ஊக்குவிக்கும் விதத்திலும், தங்கள் நாடுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ரஷ்யா செல்லவுள்ள ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்களுக்காகவுமே இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பந்துகள் ரஷ்யாவிற்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்பாக மெக்ஸிக்கோவின் பிரதான நகருக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. பின்னர் அங்கிருந்து எதிர்வரும் 26 ஆம் திகதி கப்பல் மூலம் ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)