Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தாய்வானில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு எதிராக விழிப்புணர்வு

In உலகம்
Updated: 12:15 GMT, May 15, 2018 | Published: 12:15 GMT, May 15, 2018 |
0 Comments
1113
This post was written by : Varothayan

பிளாஸ்டிக் பாவனையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வூட்டுவதற்காக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தாய்வானின் ஒர்ஷிட் தீவின் கடற்கரையோரங்களை சுத்தப்படுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், உலகின் பல பாகங்களில் இருந்தும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சென்று பங்கேற்றுள்ளனர்.

ஆசிய பசுபிக் கடலின் பல பகுதிகளில் இருந்தும் குறித்த தீவை நோக்கி பிளாஸ்டிக் கழிவுகள் வந்தடைவதாக லின் செங் வென் குறிப்பிடுகிறார்.

குறித்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக ஒர்ஷிட் தீவில் பிளாஷ்டிக் கழிவுகளுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றார்.

ஆனாலும், தனது பணி குறித்து அவர் கவலை கொள்கிறார். காரணம், தனது சுத்தப்படுத்தும் பணிகளால், குறித்த தீவானது அசுத்தமானது என்கின்ற எடுகோளை சுற்றுலாப்பயணிகள் எடுத்தால், ஒர்ஷிட் தீவின் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும் என நினைக்கின்றார்.

ஆனாலும், இதைச் செய்வதைத் தவிர தனக்கு வேறு தீர்வில்லை என்று அவர் குறிப்பிடுகிறார்.

குறித்த தீவின் துப்பரவுப் பணிகளுக்காக அவர் தற்போது பணத்தைத் திரட்ட முயல்கிறார்.

அதன் ஒரு கட்டமாகவே உலகெங்கிலும் இருந்து பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த துப்பரவு பணிகளில் பங்கேற்றுள்ளனர்.

தாய்வான் கடற்கரையில் ஒதுங்கும் பிளாஸ்டிக் கழிவுகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை கடல் வழிப்போக்குவரத்து, கடற்படை பாவனை உள்ளிட்ட கடல் கப்பல் போக்குவரத்துக்களால் சேர்வதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg