Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜப்பானிய அரசாங்கத்தால் இலங்கைக்கு உதவி!

In வணிகம்
Updated: 15:16 GMT, May 15, 2018 | Published: 14:09 GMT, May 15, 2018 |
0 Comments
1053
This post was written by : Anojkiyan

விமான நிலைய பொதுப் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளின் போது இலங்கை அரசாங்கத்தின் ஆற்றலை மேம்படுத்துவதற்காக பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திதிட்ட மானிய உதவியின் கீழ் ஜப்பானிய அரசாங்கம் 102 மில்லியன் ஜப்பானிய யென்கள் (ஏறத்தாழ 149 மில்லியன் இலங்கை ரூபாய்) பெறுமதியான உபகரணங்களை வழங்கியுள்ளது.

இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் கெனிச்சி சுகனுமா மற்றும் போக்குவரத்து சிவில் விமானப் சேவைகள் அமைச்சர் நிமல் ஸ்ரீ பால டி சில்வா ஆகியோர் பிரசன்னத்தில் கையளிப்பு நிகழ்வு 2018 மே 14ஆம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் நடைபெற்றது.

இந்த மானிய உதவியின் கீழ் அம்புலன்ஸ்கள்இ திரவ வெடிபொருட்களை இனங்காணும் கருவிகள்இ விமான சேவை ஊழியர்களை காவிச்செல்லும் வாகனங்கள், தோல் வெப்பநிலையை அளவிடும் பொறிமுறை உட்பட விமான சேவைத்துறையின் பொதுப் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பிற்கு அவசியமான பரந்துபட்ட ரீதியான அத்தியாவசிய உபகரணங்கள் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டன.

தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மானிய உதவி ஆகியவற்றின் போதான கொள்முதல் சேவைகளுக்குப் பொறுப்பாகவிருக்கும் துஐஊளு எனப்படும் ஜப்பானிய சர்வதேச கூட்டுறவு பொறிமுறை அமைப்பும் இந்த நிகழ்வின் போது பிரசன்னமாகியிருந்தது.

நாட்டின் பொதுப்பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத்திற்கு எதிரான திறனை வலுப்படுத்துவதற்கான இந்த திட்டமானது விமான நிலையத்தைப் பாதுகாப்பான முறையில் அனைத்து பயணிகளும் பயன்படுத்துவதற்கு வழிசெய்வதன் காரணமாக முக்கியமானதொரு பங்களிப்பாக ஜப்பானியத் தூதரகம் கருதுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)