Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாரணாசியில் கோர விபத்து: 18 பேர் உயிரிழப்பு – பலர் கவலைக்கிடம்

In இந்தியா
Updated: 03:02 GMT, May 16, 2018 | Published: 03:02 GMT, May 16, 2018 |
0 Comments
1391
This post was written by : Jeyachandran Vithushan

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி பகுதியில் உள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் 18 பேர் உயிரிழந்துள்ளதோடு, 50இற்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாலத்தின் கீழ் தரித்திருந்த மற்றும் அந்த வழியாக பயணித்த வாகனங்கள் மீது பாலம் இடிந்து வீழ்ந்தமையினால், பலர் உயிரிழந்துள்ளதுடன்  படுகாயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த விபத்தினையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

மீட்பு நடவடிக்கைகள் இன்றும் (புதன்கிழமை) நீடிக்கின்ற நிலையில், தற்போது வரையில் 18 பேர் உயிரிழந்துள்ளதோடு 50இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதால், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகின்றது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்கள் பெரும் அச்சம் கொண்டுள்ளனர். தங்கள் உறவுகள் உயிரிழந்துள்ளனரா என்பது குறித்து அறிவதற்காக அவர்கள் வைத்தியசாலையினை சூழ்ந்துள்ள நிலையில், அங்கு பதற்றமான சூழல் நிலவுகின்றது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)