Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்கொரியாவுடனான உயர்மட்ட பேச்சுவார்த்தை ரத்து: வடகொரியா அதிரடி

In
Updated: 03:08 GMT, May 16, 2018 | Published: 03:08 GMT, May 16, 2018 |
0 Comments
1073
This post was written by : Risha

வட மற்றும் தென்கொரியாவிற்கு இடையே இன்று (புதன்கிழமை) நடைபெறவிருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையினை வடகொரியா ரத்து செய்துள்ளது.

அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து கூட்டு இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறித்து வடகொரியா அதிருப்தி கொண்டுள்ள நிலையிலேயே பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டு இராணுவ பயிற்சியானது ஆத்திரமூட்டல் செயற்பாடாக அமைந்துள்ளதுடன், இது படையெடுப்புக்கான ஒத்திகையாகும் என வடகொரிய அரச ஊடகமான KNCA செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங்-உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே எதிர்வரும் ஜுன் 12ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை நடைபெறுவது குறித்தும் சந்தேகம் வெளியிட்டுள்ள வடகொரியா, அமெரிக்காவிற்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிம்-ஐ சந்திப்பிதற்கான அழைப்பை கடந்த மார்ச் மாதம் ஏற்றுக்கொண்ட ட்ரம்ப், உலக சமாதானத்திற்கான மிக முக்கிய தருணத்தை உருவாக்க தாம் இருவரும் முயற்சிக்கப் போவதாகவும் குறிப்பிட்டார்.

கொரிய யுத்தத்தை முறையாக முடிவுக்கு கொண்டு வருதல், அணுவாயுதமற்ற கொரிய தீபகற்பத்தை உருவாக்குதல் உள்ளிட்ட, வட மற்றும் தென்கொரிய தலைவர்களிடையே கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற உச்சிமாநாட்டின் அறிவிப்பை நடைமுறைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தும் வகையில் இன்றைய பேச்சுவார்த்தை நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)