Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்டாலினை தொடர்ந்து வைகோ – திருமாவளவனுக்கும் அழைப்பு

In இந்தியா
Updated: 04:14 GMT, May 16, 2018 | Published: 03:22 GMT, May 16, 2018 |
0 Comments
1056
This post was written by : Jeyachandran Vithushan

‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ என்ற தலைப்பில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோருக்கு கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்வரும் 19 ஆம் திகதி சென்னையின் மக்கள் நீதி மய்யம் சார்பில் கூட்டம் ஒன்றினை நடத்த அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஏற்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, குறித்த இந்த கூட்டத்தில் பங்குபற்றுமாறு நேற்று முன்தினம்  தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினிற்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

மேலும், இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு, திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அனைத்திந்திய இலட்சிய திராவிட முன்னேற்றக்கழக நிறுவனர் விஜய டி.ராஜேந்தர் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் மக்கள் நீதி மய்யத்தின் டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg