Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காஸா வன்முறை துன்பகரமானது: தெரேசா மே கவலை

In
Updated: 05:42 GMT, May 16, 2018 | Published: 05:42 GMT, May 16, 2018 |
0 Comments
1057
This post was written by : Elakkiya

காஸா எல்லையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் துன்பகரமானது என்பதுடன் கவலையளிப்பதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். அத்துடன் சம்பவம் குறித்து சுதந்திரமான விசாரணை அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை காஸா எல்லையில் பலஸ்தீனர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன்போது, பலஸ்தீனர்கள் 16 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் சர்வதேசத்தின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில் துருக்கிய ஜனாதிபதி தையீப் எர்டோகனுடனான செய்தியாளர் மாநாட்டில் தெரேசா மே மேற்படி கவலை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தெரேசா மே மேலும் தெரிவிக்கையில், சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணையின் மூலம் நிகழ்ந்த உண்மைகளை உறுதிப்படுத்துவதற்கான அவசர தேவை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று வன்முறை சம்பவத்தின் விளைவாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு துருக்கிய ஜனாதிபதி தையீப் எர்டோகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)