Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியாவில் தந்தையும் மகனும் சடலமாக கண்டெடுப்பு!

In இலங்கை
Updated: 04:28 GMT, May 16, 2018 | Published: 04:28 GMT, May 16, 2018 |
0 Comments
1048
This post was written by : poovannan

வவுனியா உலுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூடுவெந்தபுலவு குளத்திற்கு அருகே தந்தையும் மகனும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியைச் சேர்ந்த சாகில் முகமட் முஸ்தப்பா (வயது 48) மற்றும் அவரது மகனான முஸ்தப்பா முகமட் ரயாஸ் (வயது 15) ஆகியோரே நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10.00 மணியளவில் இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இவ்விருவரும் மீன் பிடிக்கச் சென்றவேளையில், மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் வவுனியா குற்றத் தடயவியல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இக்குளத்திற்கு அருகே காணப்பட்ட மின்சார கம்பியிலிருந்து மின்சாரம் பெறப்பட்டமைக்கான தடயங்களை உலுக்குளம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த உலுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)