Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காங்கிரஸ் திடீர் முடிவு: பெரும்பான்மையுடன் ஆளுநரைச் சந்திக்கவுள்ள குமாரசுவாமி

In இந்தியா
Updated: 03:49 GMT, May 16, 2018 | Published: 03:49 GMT, May 16, 2018 |
0 Comments
1130
This post was written by : Jeyachandran Vithushan

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னர் காங்கிரஸ் திடீர் முடிவுகளை எடுத்து வரும் நிலையில் 3ஆம் இடத்தினைப் பிடித்துள்ள மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் குமாரசுவாமி முதல்வராக பொறுப்பேற்க காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கியுள்ளது.

அதன்படி காங்கிரஸின் துணையுடன் கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமைக் கோரி மத சார்பற்ற ஜனதா தளத் தலைவர் குமாரசுவாமி, இன்று (புதன்கிழமை) ஆளுநரைச் சந்திக்கவுள்ளார்.

இதேவேளை, 104 ஆசனங்களைப் பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவும் ஆட்சியமைக்க உரிமைக் கோரி ஆளுநரைச் சந்திக்கவுள்ளார்.

நடைபெற்று முடிந்த கர்நாடகா தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க ஆட்சியமைப்பதைத் தடுக்க, மத சார்பற்ற ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் 78 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், 37 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் மத சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரக்ளின் கூட்டம் இன்று காலை பெங்களூரில் நடைபெற்றது. அதில் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மதசார்பற்ற ஜனதாக தள உறுப்பினர்களின் கூட்டமும் இன்று நடைபெற்றது.

இதில் குமாரசுவாமி சட்டமன்றத் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுனரைச் சந்தித்து, ஆட்சியமைக்க உரிமைக் கோரவுள்ளார்.

முதல்வர் பதவி குமாரசுவாமிக்கும், துணை முதல்வர் பதவி காங்கிரஸ் கட்சி உறுப்பினருக்கும் வழங்க இரு தரப்பினரிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, 104 ஆசனங்களைப் பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியும் ஆட்சியமைக்க உரிமைக் கோரவுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 112 ஆசனங்கள் இல்லாத போதிலும், ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக் கோரப்போவதாக, அந்த கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடியூரப்பா சட்டமன்றத் தலைவராக தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)