Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காவிரி விவகாரம்: இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

In இந்தியா
Updated: 04:27 GMT, May 16, 2018 | Published: 04:23 GMT, May 16, 2018 |
0 Comments
1046
This post was written by : Jeyachandran Vithushan

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜரான நிலையில், மத்திய அரசு தரப்பில் முக்கிய வரைவுத் திட்டம் ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த திட்டமானது, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றம் மாசி மாதம் 16 ஆம் திகதி வழங்கிய தீர்ப்பினை அமுல்படுத்தும் அதிகாரமிக்க அமைப்பாக இது இருக்கும் எனவும், அதில் தலைவர் தவிர 8 பேர் உறுப்பினர்களாக இடம்பெறுவார்கள் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதே போன்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தனியாக அமைக்கப்படும் என்றும் அதிலும் 9 பேர் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அந்த அமைப்பின் நிலை, அதனை அமுல்படுத்துவதற்கான காலம் உள்ளிட்டவை குறித்து இன்றைய விசாரணையின் போது உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)