Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நினைவுதின நிகழ்வுகளில் த.தே.கூ. கலந்துகொள்வது ஏற்புடையதல்ல: சுரேஸ் தெரிவிப்பு

In இலங்கை
Updated: 05:04 GMT, May 16, 2018 | Published: 05:01 GMT, May 16, 2018 |
0 Comments
1070
This post was written by : poovannan

முள்ளிவாய்க்கால் மாவீரர்தின நிகழ்வுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்வது ஏற்புடையதல்ல என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு மாவட்ட அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்துகொள்வது தொடர்பாக இன்று (புதன்கிழமை) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் அவ்வறிக்கையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் மாவீரர்தின நிகழ்வுகளில் கலந்துகொள்வது ஏற்புடையதல்ல.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணையினூடாக நீதிகிடைக்கும் என தாயக மக்களும் சிவில் அமைப்புக்களும் சில அரசியல் பிரமுகர்களும் புலம்பெயர் மக்களும் தமிழ்நாட்டு உறவுகளும் பல தடவைகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், சர்வதேச விசாரணையை வலியுறுத்தாமல் உள்நாட்டு விசாரணைக்கு ஒப்புதல் வழங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கிடைத்த அத்தனை சந்தர்ப்பங்களையும் நழுவவிட்டனர்.

கிழக்கில் நடந்த அத்தனை படுகொலைகளுக்கும் கிழக்கு தமிழ் மக்களுடைய நிலைப்பாட்டை சர்வதேச மயப்படுத்துவதற்கும் காலஞ்சென்ற மாமனிதர் ஜோசப்பரராசசிங்கமே முன்னின்று உழைத்தவராவார்.

தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வந்தமையினாலேயே ஜனநாயக ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் போராட்டத்தினை முன்னெடுத்தனர். மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தின்போது முள்ளிவாய்க்கல் பேரவலம் ஏற்பட்டது” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)