Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரான் உடன்படிக்கையில் தொடர ஐரோப்பிய ஒன்றிய உயர் இராஜதந்திரிகள் முடிவு

In ஐரோப்பா
Updated: 04:38 GMT, May 16, 2018 | Published: 04:38 GMT, May 16, 2018 |
0 Comments
1048
This post was written by : Risha

ஈரான் அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ள நிலையில், ஐரோப்பிய உயர்மட்ட இராஜதந்திரிகள் அதில் தொடர்ந்து நீடிக்க ஒப்புகொண்டுள்ளனர்.

பிரித்தானியா, ஜேர்மன், பிரானஸ் மற்றும் ஈரான் வெளியுவுத்துறை அமைச்சர்களுடனான சந்திப்பை தொடர்ந்து பெல்ஜியத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த ஐரோப்பிய ஒன்றிய வெளயுறவுக் கொள்கை தலைவர் ஃபெடரிகா மொஹெரெனி இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியம், எதிர்வரும் சில வாரங்களில் ஈரானுடன் அனைத்து மட்டத்திலும் தீவிர பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

குறித்த பேச்சுவார்த்தைகளின்போது, பொருளாதார தடைகளை புதுப்பிக்க அமெரிக்க திட்டமிட்டுவரும் சூழலில் ஈரானுடன் பொருளாதார உறவுகளை பராமரித்தல், ஈரானுடன் பயனுள்ள வகையில் வங்கி பரிவர்த்தனைகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

இது குறித்து மேலும் தெரிவித்த ஃபெடரிகா மொஹெரெனி, ”ஈரான் அணுசக்தி உடன்படிக்கை தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்த நாம் உறுதியாகவுள்ளோம். அது கடினமானதென்ற போதிலும் அதனை செய்வதில் நாம் உறுதியாக உள்ளோம்” எனக் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)