Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பா.ஜ.க வெற்றியில் சந்தேகம்: இயந்திரம் மூலமான வாக்குப் பதிவில் மோசடி?

In இந்தியா
Updated: 05:33 GMT, May 16, 2018 | Published: 04:51 GMT, May 16, 2018 |
0 Comments
1307
This post was written by : Jeyachandran Vithushan

ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பதை நம்ப முடியவில்லை என மகாராஷ்ர தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் குற்றம் சாட்டியுள்ளார்.

முதலில் தேர்தல் முடிவை ஆய்வு செய்ய வேண்டும் என கூறிய அவர் இலத்திரனியல் இயந்திரங்களில் வாக்கு பதிவு செய்தமையானது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வலுவாக இருந்ததுடன் அரசுக்கு எதிராக அதிருப்தி நிலவவில்லை, அதுமட்டுமன்றி ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக அங்கு பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவுக்கும் நற்பெயர் இருக்கவில்லை என அவர் கூறினார்.

இவ்வாறு இருக்கையில் கர்நாடகாவில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றிபெற்று இருப்பது நம்பிக்கையளிக்கவில்லை. மக்கள் மனதில் இருந்ததையும், தேர்தல் முடிவையும் பார்க்கும்போது வித்தியாசம் உள்ளதென கூறியுள்ளார்.

எனவே தேர்தல் முடிவை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்த அவர், தேர்தலை வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)