Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாணவர்களின் புகைப்படங்களை வெளியிட்டால் சட்ட நடவடிக்கை: அமைச்சர்

In இந்தியா
Updated: 05:22 GMT, May 16, 2018 | Published: 05:22 GMT, May 16, 2018 |
0 Comments
1058
This post was written by : Jeyachandran Vithushan

தமிழகத்தின் பிளஸ் 2 மாணவர்களின் பரிட்சை முடிவுகளை அவர்களது புகைப்படங்களுடன் வெளியிடக்கூடாது என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.

பிளஸ் 2 மாணவர்களின் பரீட்சை முடிவுகள் இன்று (புதன்கிழமை) காலை உத்தியோகப்பூர்வமாக வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், தனியார் பாடசாலைகளில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களின் புகைப்படங்களுடன் விபரங்களை வெளியிட கூடாது என்றும் அதனை மீறும் தனியார் பாடசாலைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.

மேலும், குறித்த பரிட்சையில் தோல்வியடைந்த மாணவர்கள் மற்றும் பரீட்சைக்கு சமூகமளிக்காத மாணவர்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 25 ஆம் திகதி மீண்டும் பரீட்சைக்கு தோற்ற முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி குறித்த பரீட்சை முடிவுகளை www.tnresults.nic.in,   www.dge1.tn.nic.in  , www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)