Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

80 பேர் உயிரிழப்பு: மக்களுக்கு 72 மணி நேர எச்சரிக்கை!

In இந்தியா
Updated: 05:47 GMT, May 16, 2018 | Published: 05:47 GMT, May 16, 2018 |
0 Comments
1216
This post was written by : Jeyachandran Vithushan

கடந்த சில நாட்களாக வட மாநிலங்கள் முழுவதும் புழுதிப்புயல் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் டெல்லியில் இன்று (புதன்கிழமை) அதிகாலையும் கடுமையான புழுதிப்புயல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

பலத்த காற்றுடன் புழுதியும் சேர்ந்து தாக்கியமை காரணமாக டெல்லி மாநகர் முழுவதும் ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன் பல வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல இடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய வானிலை மையம் அடுத்த 72 மணி நேரத்திற்கு பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், இதன் போது மக்களை பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், கடந்த மே மாதம் 13 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை 2 நாட்களாக தாக்கும் புழுதிப்புயல் காரணமாக, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி உட்பட 5 மாநிலங்களில் 80 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)