Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் மக்களின் பிரச்சினையை கண்டுகொள்ளாத கோட்டாவின் சிந்தனைகள்

In இன்றைய பார்வை
Updated: 07:34 GMT, May 16, 2018 | Published: 07:16 GMT, May 16, 2018 |
0 Comments
1148
This post was written by : Arun Arokianathan

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கடந்த சில நாட்களாக நாட்டின் எதிர்காலம் தொடர்பாக தமது கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துவருகின்றதைக் காணமுடிகின்றது. அவரது பார்வையில் நாட்டின் பொரு­ளா­தாரம் மிக மோச­மான நிலையில் உள்­ள­தோடு, நீதி முறைமை செய­லி­ழந்­துள்­ளது. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­டாத நிலையில் நாட்டில் எந்­த­வொரு முன்­னேற்­ற­க­ர­மான செயற்­பா­டு­களும் இது வரை இடம்­பெ­ற­வில்லை. பொரு­ளா­தார உறு­திப்­பாடு மற்றும் நீதியின் செயலாக்­கத்­தன்மை என்­ப­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்ட ஆட்சி முறை ஒன்­றினை நோக்­கிய மாற்­றத்­திற்­கான தேவைப்­பாடு உரு­வா­கி­யுள்­ள­தாக எடுத்துரைக்கப்படுகின்றது.

இதனைத்தவிர பொருளாதார கேந்திர ரீதியாகவும் சில கருத்துக்களை கோத்தாபய சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் படி,அமெ­ரிக்­காவின் முன்­னணி ஆய்வு அமைப்­புகள் இரண்டின் கருத்து படி 2030 ஆம் ஆண்­ட­ளவில் பொரு­ளா­தார ரீதியில் சீனா­வா­னது அமெ­ரிக்­காவை விஞ்சி முத­லா­வது நிலையை அடையும் எனவும் இந்­தி­யா­வா­னது ஜப்­பானை விஞ்சி மூன்­றா­வது நிலையை அடையும் எனவும் இந்­தோ­னே­ஷியா ஐந்­தா­வது ஆவது இடத்தில் காணப்­படும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது வரை மேற்­கு­லக நாடு­க­ளிடம் காணப்­பட்ட பொரு­ளா­தார ஆதிக்கம் எதிர்­வரும் காலங்­களில் ஆசிய நாடு­க­ளின வசம் காணப்­படும் என எதிர்வு கூறப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றா­ன­தொரு பொரு­ளா­தார நிலை­யினை எதிர்­கொள்­வ­தற்கு இலங்கை தயா­ரா­க­வுள்­ளதா என்­பது தொடர்பில் சிந்­தித்துப் பார்க்க வேண்டும். இச்­ச­வாலை எதிர் கொள்­வ­தற்கு ஏது­வான வகையில் எமது நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை வலுப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும். அதற்கு முறை­யான கொள்கைத் திட்­ட­மி­ட­லுடன் கூடிய செயற்­பா­டுகள் அவ­சி­ய­மாகும் .

பொரு­ளா­தார ஸ்திரத்­தன்மை மற்றும் நீதியின் உறுதி தன்மை ஆகிய இரண்டும் ஒரு நாட்டின் இரு கண்­க­ளாக உள்­ளன. தற்­போ­தைய அர­சாங்­கத்தில் அவை இரண்­டுமே செய­லி­ழந்­துள்ள நிலையில் ஓர் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்­டிய தேவை உள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்கு வந்த போது நாட்டில் நில­விய பயங்­க­ர­வா­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வர வேண்­டிய பாரிய சவால் காணப்­பட்­டது. அவ­ரது பலம் வாய்ந்த தலை­மைத்­து­வத்தின் மூல­மாக யுத்­தத்தை முடி­வுக்கு கொண்டு வர முடிந்­தது. அதே போலவே தற்­போது பொரு­ளா­தா­ரத்தை மீளக் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய மிகப் பாரிய சவால் காணப்­ப­டு­கின்­றது.

தற்­போ­தைய அர­சாங்­கத்தால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களின் விளை­வு­களைப் பெற்றுக் கொள்­ள­வ­தற்கு இன்னும் சில வரு­டங்கள் ஆகும் என கூறு­கி­றார்கள். நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­ததில் இருந்து முன்னாள் ஆட்­சி­யா­ளர்­களை பழி­வாங்­கு­வ­தி­லேயே கவனம் செலுத்தி வரு­கின்­றது. ஆகை­யி­னா­லேயே இவ்­வ­ர­சாங்­கத்­தினால் முறை­யான வெளிப்­படைத் தன்­மை­யான அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கைகைள் எவற்­றையும் முன்­னெ­டுக்க இய­ல­வில்லை. ஆட்­சியில் மூன்­றரை வரு­டங்கள் கடந்தும் எவ்­வித முன்­னேற்­றங்­களும் இல்லை.

எமது நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு அறி­ஞர்கள், புத்­தி­ஜீ­விகள், தொழி­நுட்­ப­அ­றி­வு­டை­யோரின் ஆலோ­ச­னைகள் மற்றும் வழி­காட்­டல்கள் அவ­சியம் ஆகும். வியத்­மக அமைப்பின் மூலம் பொரு­ளா­தார விரி­வாக்கம் மற்றும் உறு­தி­யான நீதி ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்ட ஆட்­சி­யினை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு அவ­சி­ய­மான கார­ணிகள் தொடர்பில் ஆரா­யப்­ப­டு­கின்­றன. இலங்கை எழுத்­த­றிவு வீதத்தை 98 எனும் மட்­டத்தில் பேணு­கின்­றது. எனினும் அறி­வு­டைய புத்தி ஜீவிகள் பெரும்­பாண்­மை­யானோர் தனியார் துறை மற்றும் வெளி­நாட்டு வேலை வாய்ப்­புக்­களை நாடு­கின்­றார்கள். இது அரச துறையில் உள்ள குறை­பாட்­டையே வெளிப்­ப­டுத்­து­கின்­றது. அதே போல் எமது நாட்டின் உற்­பத்தி மற்றும் ஏற்­று­மதி என்­பன வெகு­வாக வீழ்ச்சி அடைந்­துள்­ளன. வெளி­நா­டு­களில் தொழில் புரியும் பணிப்­பெண்கள் மூலம் கிடைக்கும் அந்­நியச் செலா­வ­ணியே எமது நாட்டின் குறிப்­பி­டத்­தக்க வரு­மா­ன­மாக உள்­ளது.

ஆகவேஇ பொரு­ளா­தா­ரத்தை வலுப்­ப­டுத்­து­வதன் மூல­மா­கவே ஏனைய அனைத்து துறை­க­ளிலும் உறு­திப்­பாட்டை அடைந்­து­கொள்ள முடியும். அதற்­கேற்­ற­வாறு எமது நாட்டில் கல்வி முறை­யிலும் சீர்­தி­ருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.

எமது நாட்டின் புத்­தி­ஜீ­விகள் தமது தொழில் தொடர்பில் மாத்­திரம் கவனம் செலுத்தாது நாட்டின் அரசியல் சார் முன்னேற்றம் மற்றும் கொள்கை வகுப்பு என்பவற்றிலும் அக்கறையுடன் செயற்பட வேண்டும். தெளிவான இலக்கை நோக்கிய கொள்கை வகுப்போடு அதனை முறையாக செயற்படுத்துவதன் மூலமே பொருளாதார உறுதிப்பாட்டையும் அதனூடான நிலைத்த அபிவிருத்தியையும் அடைந்து கொள்ள முடியும் . எனவே சிறந்த எதிர்காலத்தை நோக்கி ஓர் மாற்றத்தை ஏற்படுத்துவற்காக அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்  என்றும் அண்மையில் ஆற்றிய உரையில் கோத்தாபய ராஜபக்ஸ தனது எண்ணக்கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

பொருளாதார முன்னேற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் கோத்தபாய இந்த நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதிலேயே நாட்டின் நிலையான சுபீட்சம் மற்றும் எதிர்காலம் தங்கியுள்ளதென்பதை சிந்திக்கத்தவறியமை கவலைக்குரியது. நாட்டில் மூன்று தசாப்தகாலமாக நிலவிய ஆயுதப் போராட்டம் சிங்கப்பூரைவிட செழித்தோங்க வேண்டிய இலங்கையின் பயணத்தை சின்னாபின்னமாக்கியதை அவர் உணரவில்லையா? இந்த நாட்டில் இனப்பிரச்சனைக்கு கௌரவமான தீர்வைப் பெற்றுக்கொடுத்தால் வெளிநாட்டில் வாழ்கின்ற புலம்பெயர் சமூகத்தின் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் பங்களிப்பை இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக பெற்றுக்கொள்ள முடியும்.

2002ம் ஆண்டில் ஏற்பட்ட போர் நிறுத்தத்தின் பின்னர் யுத்தத்தால் சின்னாபின்னமடைந்திருந்த கிளிநொச்சி சாவகச் சேரி உட்பட்ட நகரங்களைக் கட்டியெழுப்புவதில் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு முக்கிய பாத்திரம் வகித்ததை இந்த வேளையில் நினைவூட்ட விரும்புகின்றோம். நாடு 2020 எப்படி இருக்க வேண்டும் 2030ல் எப்படி இருக்க வேண்டும் என்ற விடயங்களை தமிழிலும் பட்டியலிட்ட கோத்தபாய தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாண்பது குறித்து கண்டுகொள்ளாமல் விட்டது கவலைக்கிடமானது. தமிழர்களுக்கான தீர்வைப்புறந்தள்ளி அன்றேல் அலட்டிக்கொள்ளாமல் வெறுமனே பொருளாதார சுபீட்சம் தொடர்பாக மாத்திரம் வியூகங்களை வகுத்துக்கொண்டிருந்தால் அது உண்மையான பலாபலனைத் தரமாட்டாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொண்டு தமது பாதைகளை செம்மைப்படுத்த வேண்டும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg