Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் ஆட்சேபனை விண்ணப்பம் சமர்ப்பிப்பு

In இலங்கை
Updated: 07:40 GMT, May 16, 2018 | Published: 07:40 GMT, May 16, 2018 |
0 Comments
1035
This post was written by : poovannan

யாழ்ப்பாணம் – நாவற்குழியில் இராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் சட்டமா அதிபர் திணைக்கள பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர ஆட்சேபனை விண்ணப்பத்தினைச் செய்துள்ளார்.

யாழ். மேல் நீதிமன்றில், மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தபோது இந்த ஆட்சேபனையை விண்ணப்பம் செய்தார்.

ஆள்கொணர்வு மனுக்கள் காலம் கடந்தவை என்பதாலும் வழக்கில் இணைக்கப்பட்டுள்ள சான்றுகளிலொன்று போலியானது என்பதாலும் குறித்த மனுக்களைத் தள்ளுபடிசெய்ய விண்ணப்பித்தார்.

மனுக்களில் 1ஆம் பிரதிவாதியாக துமிந்த கெப்பிட்டிவெலான, 2ஆம் பிரதிவாதியாக இலங்கை இராணுவ தளபதி மற்றும் 3ஆம் பிரதிவாதியாக சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஆள்கொணர்வு மனுக்களின் பிரதிவாதிகள் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைக்கு மனுதாரர்கள் பதில் ஆட்சேபனையை மன்றில் முன்வைக்க வரும் ஜூலை 11ஆம் திகதி தவணையிடப்பட்டு வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டன.

இவ்வழக்கில் சட்ட மா அதிபர் திணைக்கள பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர, அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த், மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகள் வி.திருக்குமரன், எஸ்.சுபாசினி ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர் கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்கள் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)