Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பயனாளிகள் பெறும் உதவிகளை வீண் விரயம் செய்ய வேண்டாம்: உதயகுமார் வேண்டுகோள்

In இலங்கை
Updated: 08:57 GMT, May 16, 2018 | Published: 08:57 GMT, May 16, 2018 |
0 Comments
1038
This post was written by : poovannan

வீடமைப்புக்காக அரசினால் வழங்கப்படும் உதவிகளானாலும் அவற்றை பயனாளிகள் வீண் விரயம் செய்யாது உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வீடுகளைப்பெற்ற பயனாளிகளையும் ரணவிரு சேவை அதிகாரிகளையும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சந்தித்தபோது அங்கு உரையாற்றுகையிலேயே இன்று (புதன்கிழமை) அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “யுத்தத்தினால் இழப்புக்களைச் சந்தித்த குடும்பங்களுக்குக் கிடைக்கும் உதவிகளை வீண் விரயம் செய்யாது நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.

இந்த வீடுகளின் பயனாளிகள் சிறந்த முறையில் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட்டால் அதன் மூலம் மற்றவர்களுக்கும் உதவிகள் கிடைக்க சந்தர்ப்பம் ஏற்படும்.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 39 ரணவிருசேவா குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக்கொள்வதற்கு உதவி கிடைக்கப்பெற்றமை அரிய விடயமாகும்” எனத் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் மட்டக்களப்பு உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன், ரணவிரு சேவா அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலர் ரீ.எச்.கீர்த்திகா ஜயவர்த்தன, மட்டக்களப்பு மாவட்ட ரணவிரு சேவா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.சி.அப்துல் வஹாப், அதன் உப செயலாளர் எச்.எம்.மன்சூர், பொருளாளர் ஏ.லிங்கராஜா மற்றும் பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)