Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காவிரி விவகாரம்: தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு சம்மதம்

In இந்தியா
Updated: 09:18 GMT, May 16, 2018 | Published: 09:18 GMT, May 16, 2018 |
0 Comments
1071
This post was written by : Jeyachandran Vithushan

காவிரி நீர் விவகாரம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட நதிநீர் பங்கீட்டு அமைப்பிற்கு ‘காவிரி மேலாண்மை வாரியம்’ என்ற பெயர் வைக்க இன்று (புதன்கிழமை) உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது.

குறித்த வழக்கு விசாரணையானது உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தமிழகம், கர்நாடகா மற்றும் புதுச்சேரி அரசுகள் சார்பில் அறிக்கைகளை தாக்கல் செய்யப்பட்டன.

மேலும், வரைவு செயல் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குழுவிற்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியிருந்ததுடன், வரைவு செயல்த் திட்டக் குழுவின் தலைமையகம் பெங்களூரில் இருக்கக் கூடாது என்றும் தலைநகர் டெல்லியில் இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் அந்த குழுவிற்கு ‘காவிரி மேலாண்மை வாரியம்’ என பெயர் வைக்க தயார் என மத்திய அரசு தெரிவித்தது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது.

அதில், நதி நீர் பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஒரு குழுவை பரிந்துரை செய்து, 10 பேர் கொண்ட அந்த குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர் எனவும், குழுவின் தலைமையகம் பெங்களூரில் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)