Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘இருவர் ஒருவர் ஆனர்’: விண்ட்சர் நகரில் அழகிய சுவரோவியம்

In
Updated: 09:40 GMT, May 16, 2018 | Published: 09:40 GMT, May 16, 2018 |
0 Comments
1086
This post was written by : Risha

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகை மேர்கன் மார்க்கலின் திருமணத்தை முன்னிட்டு, லண்டனை தளமாகக் கொண்ட தெரு கலைஞரொருவர் அழகிய சுவரோவியமொன்றை வரைந்துள்ளார்.

ஹரி-மார்க்கல் திருமணம் நடந்தேறவுள்ள விண்ட்சர் நகரில் ‘இருவர் ஒருவர் ஆனர்’ என்ற தொனிப்பொருளில் கறுப்பு-வெள்ளை நிறத்தில் இச்சுவரோவியம் தீட்டப்பட்டுள்ளது.

அவர்களது உத்தியோகப்பூர்வ நிச்சயதார்த்த புகைப்படமொன்றை மாதிரியாகக் கொண்ட இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.

ஹரி-மார்க்கல் ஜோடி ஒருவருக்கொருவர் தமக்குள் கொண்டுள்ள உண்மையான அன்பை போற்றி, நினைவுகூரும் வகையில் இந்த ஓவியத்தை வரைந்துள்ளதாக அந்த கலைஞர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த ஓவிய கலைஞர், ”ஹரி-மார்க்கல் திருமணம் நடைபெறவுள்ள விண்ட்சர் நகரில் ஒரு சுவரோவியத்தை தீட்ட வேண்டும் என நான் விரும்பிய போதிலும், அது எனக்கு பெரும் சவாலாக அமைந்தது.

விண்ட்சர் நகர் மிகவும் அழகான நகராக விளங்குகின்ற அதேவேளை, தங்களது கட்டட சுவர்களில் ஓவியங்களை வரைவதற்கு உரிமையாளர்களும் ஆர்வம் காட்டுவதில்லை.

ஆனால், எனது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள இறுதியில் சிறந்த இடமொன்றை பெற்றுக் கொண்டதுடன், ஆசையை நிறைவேற்றியுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg