Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காசா படுகொலை: இஸ்ரேல் தூதுவரை வெளியேறுமாறு துருக்கி பணிப்பு

In ஐரோப்பா
Updated: 10:32 GMT, May 16, 2018 | Published: 10:32 GMT, May 16, 2018 |
0 Comments
1063
This post was written by : Risha

இஸ்ரேல் படையினரால் 60 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதையடுத்து, துருக்கியிலுள்ள இஸ்ரேல் தூதுவரை நாட்டிலிருந்து வெளியேறுமாறு துருக்கி பணித்துள்ளது.

காசா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்தும், அமெரிக்க தூதுவர்களை டெல் அவிவிலிருந்து மீள அழைக்கும் அமெரிக்காவின் செயற்பாடு தொடர்பாகவும் துருக்கி கடும் விமர்சனம் வெளியிட்டு வந்த நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை பலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலினால் அரங்கேற்றப்பட்ட வன்முறையை படுகொலை என வர்ணித்த துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன், இஸ்ரேலை பயங்கரவாத மாநிலம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இஸ்ரேலிலுள்ள துருக்கி தூதுவரையும் உடனடியாக நாடு திரும்புமாறு எர்டோகன் அழைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg