Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பந்தை சேதப்படுத்திய வீரருக்கு விளையாட அனுமதி!

In கிாிக்கட்
Updated: 10:42 GMT, May 16, 2018 | Published: 10:42 GMT, May 16, 2018 |
0 Comments
1062
This post was written by : Litharsan

அண்மையில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் விளையாடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்த அவுஸ்ரேலிய வீரர் பான்கிராப்ட் இற்கு கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியை வெஸ்டேர்ன் அவுஸ்ரெலியா அண்மையில் வழங்கியுள்ளது. எனவே அவர் கிளப் போட்டிகளில் விளையாடவுள்ளார்.

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, அவுஸ்ரேலிய வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வோர்னர், பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார்கள். அதில் ஸ்மித், வார்னருக்கு ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாத தடையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபை விதித்தது.

எனினும், அவுஸ்ரேலிய கிரக்கெட் வாரியத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் ஸ்மித், வோர்னரால் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாட முடியும் என்று கூறி வருகிறார்கள்.

இதற்கிடையே கிளப் கிரிக்கெட் போட்டியில் விளையாட ஸ்மித், வோர்னருக்கு நியூ சவுத் வேல்ஸ் அனுமதி அளித்தது. ஆனாலும் பந்தை சேதப்படுத்திய பான்கிராப்ட், கிளப் கிரிக்கெட்டில் விளையாட வெஸ்டேர்ன் ஆஸ்திரேலியா அனுமதி அளித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg