Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் கூடவுள்ள அரசியலமைப்பு வழிநடத்தல் குழு!

In இலங்கை
Updated: 09:59 GMT, May 16, 2018 | Published: 09:59 GMT, May 16, 2018 |
0 Comments
1027
This post was written by : Ravivarman

அரசியலமைப்பு வழிநடத்தல் குழு பல மாதங்களின் பின்னர் எதிர்வரும் 24 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது.

பிரதமரின் தலைமையிலான குறித்த அரசியலமைப்பு வழிநடத்தல் குழு, அரசியலமைப்பு பேரவையின் ஆதரவுடன் நியமிக்கபட்டதுடன், இக்குழு கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இறுதியாக கூடியிருந்தது.

21 உறுப்பினர்களைக் கொண்ட குறித்த அரசியலமைப்பு வழிநடத்தல் குழு பாராளுமன்றத்தில் இடைக்கால அறிக்கையொன்றை சமர்ப்பித்ததுடன் அது தொடர்பிலான விவாதம் 5 நாட்கள் வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த விவாதத்தின் போது முன்வைக்கப்பட்ட விடயங்கள், குறித்த இடைக்கால அறிக்கை தொடர்பில் கிடைக்கப்பெற்ற பொதுமக்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்கள் தொடர்பில் எதிர்வரும் 24 ஆம் திகதி கூடவுள்ள அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது புதிய அரசியலமைப்பை உருவாக்குவதா அல்லது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதா என்பது தொடர்பில் தீவிர ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் செயலாளர் காரியாலயத்தின் மேலதிக செயலாளர் அரச சட்டத்தரணி யுரேஷா பெர்னான்டோ தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)