Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் இணைகிறது அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம்

In இலங்கை
Updated: 11:03 GMT, May 16, 2018 | Published: 11:00 GMT, May 16, 2018 |
0 Comments
1059
This post was written by : poovannan

முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை யாழ். பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் நினைவுகூருவதற்கு முழு ஆதரவையும் வழங்கவுள்ளோம் என அகில இலங்கை அரசாங்க பொதுஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு இன்று (புதன்கிழமை) கருத்துக் கூறுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார் .

அவர் தொடர்ந்து கூறுகையில், “யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றார்கள். அவர்களுடன் எமது அமைப்பானது இணைந்து, இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை அனுஷ்ட்டிப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்துவருகின்றது.

எமது போராட்டங்கள் அனைத்தும் தமிழ் மக்களுக்கான இணைந்த வட. கிழக்கில் ஒரு நிலையான தீர்வினை பெறவேண்டும் என்பதாகும். அதற்காக அகிம்சை வழியிலும் ஆயுதவழியிலும் தமிழர்களுடைய போராட்டங்கள் நடைபெற்றன. அந்த இரண்டு வழிப்போராட்டங்கள் மூலமும் நாம் பெரும்பான்மை சமூகத்திடமிருந்து பெற்றுக்கொண்டது ஒன்றுமே இல்லை.

அந்நாளில் எத்தனையோ தாய்மார்கள், குழந்தைகள் தங்களது உயிர்களை மாய்த்துக்கொண்டார்கள். இவர்களது எண்ணங்கள் அனைத்தும் தமிழருக்கான தீர்வு கிடைக்கும் என்றுதான் ஏங்கியதே தவிர வேறு எதற்காகவும் இல்லை” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)