Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வட.மாகாண ஆளுநருடன் சந்திப்பு!

In இலங்கை
Updated: 10:31 GMT, May 16, 2018 | Published: 10:31 GMT, May 16, 2018 |
0 Comments
1043
This post was written by : Ravivarman

வட.மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேயுடன் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரின் கலந்துரையாடல் ஒன்று அவரது அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

அதன் போது வட.மாகாண சபை அதிகாரிகளின் வினைத்திறனற்ற செயற்பாடுகளால் தாம் அதிருப்தி கொண்டுள்ளதாகவும், அதனால் வைத்தியர்கள் உட்பட பல அரச அலுவலர்கள் தமது நிலுவைகளைப் பெற வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் வைத்தியர் சங்கத்தினர் ஆளுநரிடம் எடுத்துக் கூறினார்.

ஆளுநர் உடனடியாகவே மத்திய திறைசேரி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மேலதிகமாக 4 பில்லியன் பணம் வட.மாகாண சபைக்கு பெற்றுக்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

மேலும், வட.மாகாண பிரதம செயலாளருக்கு ஏற்கனவே இருக்கின்ற நிதியை உடனடியாக விடுவித்து வைத்தியர்களுக்குரிய கொடுப்பனவுகளை உடன் வழங்குமாறும் உத்தரவு பிறப்பித்தார்.

இதேவேளை, ஆளுநரின் உத்தரவையடுத்து வைத்தியர்களுக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம் எனவும், அவ்வாறு வழங்கப்படாத பட்சத்தில் எதிர்வரும் 28ம் திகதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கும் முடிவுக்கு நாம் தள்ளப்படுவது தவிர்க்க முடியாமல் போய் விடும் என மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட.மாகாணப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)