Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி! – உலக வங்கி முக்கிய அறிவிப்பு

In இலங்கை
Updated: 10:44 GMT, May 16, 2018 | Published: 10:44 GMT, May 16, 2018 |
0 Comments
1087
This post was written by : Varshini

விவசாயிகளுடன் தனியார் முதலீட்டு நிறுவனங்கள் இணைந்து பணியாற்றுவதானது, இலங்கை விவசாயிகளுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தியென உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிப்பாளர் Idah Pswarayi-Riddihough தெரிவித்துள்ளார். கிராமிய பொருளாதாரத்தை நவீனமயப்படுத்தல், இலங்கை அடைந்த ஒரு மைல்கல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிராமிய பொருளாதாரத்தை நவீன மயமாக்கும் வேலைத்திட்டம், உலக வங்கியின் அனுசரணையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த வேலைத்திட்டம் தனியார் முதலீட்டு நிறுவனங்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளதோடு, அதற்கான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்தபோது-

”இலங்கை விவசாயத் துறைக்கு இன்று நாம் புதிய பரிணாமத்தை வழங்கியுள்ளோம். நடுத்தர வருமானம் பெறும் இலங்கை போன்ற நாடுகள், விவசாயத் துறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் கணிசமான முன்னேற்றத்தை அடைவது உறுதி.

நாட்டின் வறுமை நிலையை நீக்குவதற்கு, விவசாயமானது மூன்றிலொரு பங்கை வகிக்கின்றது. அத்தோடு, நுகர்வோரும் நோயற்ற மற்றும் சத்தான உணவைப் பெற்றுக்கொள்ளலாம்.

அதுமட்டுமன்றி தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகள், உலக விவசாய சந்தையில் பிரதான ஏற்றுமதி நாடுகளாக உள்ளன. இலங்கையும் அந்த இடத்தைப் பிடிக்கலாம். அதற்கு விவசாயத் துறை மீது அதிக முதலீடுகளை மேற்கொள்வது அவசியம்.

2025ஆம் ஆண்டின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், காணி, தொழிலாளர்கள் மற்றும் மூலதனச் சந்தை ஆகியவற்றில் தன்னிறைவை அடைந்திருக்க வேண்டும். அவையே நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக அமையும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)