Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிரென்ஃபெல் கட்டடத்திற்கு வர்ணம் பூசும் இளவரசர் வில்லியம்

In
Updated: 11:10 GMT, May 16, 2018 | Published: 11:10 GMT, May 16, 2018 |
0 Comments
1051
This post was written by : Risha

கிரென்ஃபெல் டவர் தீ விபத்தை தொடர்ந்து புனர்நிர்மானிக்கப்பட்டு வரும் குத்துச்சண்டை கழக கட்டடமொன்றிற்கு, வர்ணப்பூச்சு பூசும் பணியில் பிரித்தானிய இளவரசர் வில்லியம் ஈடுபட்டுள்ளார்.

கிரென்ஃபெல் டவர் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிறப்பு திட்டமொன்றின் கீழேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஜுன் மாதம் 14ஆம் திகதி 71 பேரை காவுகொண்ட கொடிய அனர்த்தத்தில், முதல் மாடியில் அமைந்திருந்த குத்துச்சண்டை கழக கட்டடம் முழுமையாக சேதமடைந்தது.

இந்நிலையில், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட கிரென்ஃபெல் டவரை அண்மித்த பகுதியிலேயே குறித்த கழகம் புனரமைக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

புதிய குத்துச்சண்டை கழகத்தை புனரமைக்கும் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், கெனிங்ஸ்டனுக்கு விஜயம் செய்த இளவரசர் வில்லியம், கிரென்ஃபெல் டவர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பிற மக்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜுன் மாதம் 14ஆம் திகதி இரவு வேளையில், 24 மாடிகளை கொண்ட கிரென்ஃபெல் டவர் குடியிருப்பில் திடீரென தீ பரவியதுடன், அதில் இரு குழந்தைகள் உட்பட 71 பேர்வரை பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் அதேவேளை, தமக்கு நீதி கோரி பலரும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)