Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதலாவது டெஸ்டில் பலத்தை நிரூபித்த அயர்லாந்து!

In கிாிக்கட்
Updated: 11:29 GMT, May 16, 2018 | Published: 11:29 GMT, May 16, 2018 |
0 Comments
1058
This post was written by : Litharsan

அயர்லாந்து அணிக்கு கடந்த ஆண்டில் டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டது. அந்தவகையில் தனது முதலாவது டெஸ்ட் போட்டியை பாகிஸ்தான் அணியுடன் விளையாடத் தீர்மானித்தது.

அந்தவகையில் கடந்த 11 ஆம் திகதி டப்ளினில் அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளின் டெஸ்ட் தொடர் ஆரம்பித்து நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி தொடரை வென்றிருந்தாலும். அயர்லாந்து அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டியிருந்தனர்.

பல பலமிக்க அணிகள் கூட டெஸ்ட் தொடரில் 3 நாட்களில் போட்டியை முடித்துக்கொள்ளும் நிலையிருக்கும்போது அயர்லாந்து அணி 5 நாட்களும் தொடரை விளையாடியுள்ளதுடன், சிறப்பான ஆட்டத்தையும் வெளிக்காட்டியது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவுசெய்தது.

முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியை 310 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது அயர்லாந்து. எனினும் அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் 130 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த அயர்லாந்து அணி, தனது சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டியது. 129.3 ஓவர்கள் நிறைவில் 339 ஓட்டங்களைப் பெற்றது. இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு 160 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது. அயர்லாந்து அணிக்காக கே.ஓ.பிரைன் 10 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக சதம் (118) அடித்து அணியை பலப்படுத்தினார். அவருடன் தோம்ஸன் 53 ஓட்டங்களையும், ஜோய்ஸ் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்நிலையில் 160 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி தனது வெற்றியிலக்கை அடைந்தது.

இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக கே.ஓ.பிரைன் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்தப் போட்டியின் மூலம் அயர்லாந்து அணி டெஸ்ட் போட்டிகளிலும் பலத்தை நிரூபித்துள்ள நிலையில் பலமிக்க அணியாக மிளிர்வதோடு, தற்போதுள்ள பலமிக்க அணிகளுக்கும் பெரும் சவாலாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)