Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

100 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசும் பா.ஜ.க

In இந்தியா
Updated: 11:31 GMT, May 16, 2018 | Published: 11:31 GMT, May 16, 2018 |
0 Comments
1124
This post was written by : Jeyachandran Vithushan

100 கோடி ரூபாய் தருவதாகவும், அமைச்சர் பதவி வழங்குவதாகவும் கூறி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆசைகாட்டி வருவதாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கட்சியின் முதல்வர் தேர்வின் பின்னர் ஊடகவியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது  மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு வாக்களித்தமைக்காக அனைத்து மக்களுக்கும் நன்றி என தெரிவித்த அவர், இந்த தேர்தல் முடிவானது திருப்தியளிக்கவில்லை என கூறினார்.

கர்நாடகா தேர்தல் முடிவடைந்த நிலையில் மதசார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் பா.ஜ.க. சில சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

மேலும் ம.ஜ.த. கட்சியை உடைக்க பா.ஜ.க தீவிர முயற்சி செய்து வருகிறதாகவும், போதிய எண்ணிக்கை இல்லாததால் எடியூரப்பாவால் ஆட்சி அமைக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் மத்திய அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறதாக சுட்டிக்காட்டிய அவர் இந்த கறுப்பு பணம் எங்கிருந்து வந்தது? குதிரை பேரத்தில் பா.ஜ.க. ஈடுபட்டு வரும் நிலையில் வருமான வரித்துறை என்ன செய்கிறது என கேள்வியெழுப்பியிருந்ததுடன்  பிரதமர் மோடி நாட்டை தவறாக வழிநடத்தி வருகிறார் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)