Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமர் மே-உடன் துருக்கி ஜனாதிபதி சந்திப்பு

In
Updated: 11:34 GMT, May 16, 2018 | Published: 11:34 GMT, May 16, 2018 |
0 Comments
1073
This post was written by : Risha

பிரித்தானியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன், பிரதமர் தெரேசா மே-ஐ சந்தித்துள்ளார்.

இதன்போது, பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களுக்கும் இடையே விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு, பிரித்தானியாவிற்கும், துருக்கிக்கும் இடையிலான நெருக்கமான உறவை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக, பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

ஒருநாள் விஜயமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மே துருக்கிக்கு விஜயம் செய்திருந்த நிலையில், துருக்கி பிரதமரை சந்தித்து அங்காராவில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, துருக்கி விமானப்படைக்கு போர் விமானங்களை தயாரிக்கும் செயற்திட்டத்திற்கு உதவும் வகையில், துருக்கிக்கும், பிரித்தானியாவிற்கும் இடையே 100 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான பாதுகாப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg