Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்திய அரசு தான் நினைத்ததையே செய்கின்றது – சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா

In இலங்கை
Updated: 11:58 GMT, May 16, 2018 | Published: 11:58 GMT, May 16, 2018 |
0 Comments
1044
This post was written by : Litharsan

நாங்கள் எந்த மட்டங்களிலும் கதைத்தாலும் மத்திய அரசு, தான் நினைத்ததையே செய்து கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் தகுதியானவர்கள் உள்ளபோதும், வெளிமாவட்டங்களில் வசிக்கும் பெரும்பான்மையினரைச் சேர்ந்தவர்களை நியமித்துள்ளமை காரணமாக முல்லைத்தீவு மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர்,

“எமது மாவட்டத்தில் அல்லது வடக்குப் பகுதியில் காணப்படுகின்ற அரச திணைக்கள வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் நாங்கள் பல்வேறு சந்தப்பங்களில் பல உயர்மட்டங்களுடன் கலந்தரையாடி வருகின்றோம்.

ஆனாலும், நாங்கள் எந்த மட்டத்தில் கதைத்தாலும் மத்திய அரசு, தான் நினைப்பதையே இங்கு செய்து கொண்டிருக்கின்றது.

எமது மாவட்டத்தில் திணைக்களங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தகுதியானவர்கள் உள்ளபோதும், தென்பகுதிகளில் இருக்கின்ற பெரும்பான்மையினத்தவர்களைக் கொண்டுவந்து இங்குள்ள வெற்றிடங்களை நிரப்புகின்றனர்” என்று தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)