Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திடீரெனப் பற்றியெரிந்த முச்சக்கரவண்டி!

In இலங்கை
Updated: 12:16 GMT, May 16, 2018 | Published: 12:16 GMT, May 16, 2018 |
0 Comments
1052
This post was written by : Litharsan

இளைஞர் ஒருவர் செலுத்தி வந்த முச்சக்கர வண்டி ஒன்று மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் திடீரெனத் தீப்பற்றி எரிந்தது. குறித்த சம்பவம் இன்று (புதன்கிழமை) காலை 10.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் பஸார் பகுதியில் இருந்து மாவட்டச் செயலக முன் வீதியூடாக இளைஞர் ஒருவர் செலுத்திச் சென்ற முச்சக்கர வண்டியில் திடீர் என தீப்பற்றியுள்ளது.

இதன் போது குறித்த இளைஞர் முச்சக்கர வண்டியை உடன் நிறுத்திவிட்டு தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்தார். ஆனாலும் தீயைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், மன்னார் நகர சபையின் உதவியுடன் தீ கட்டுப்படுத்தப்பட்டது.  எனினும் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்துள்ளது.

முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட திடீர் மின்ஒழுக்கின் காரணமாகவே இந்தத் தீவிபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. எனினும் தீயணைப்புப் படையினரின் உதவியைக் கோரிய போதும் அந்த உதவி கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் குறித்த பாதையூடான போக்குவரத்து சிறிதுநேரம் பாதிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)