Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அஜித்துடன் மீண்டும் இணையும் கௌதம் மேனன்!

In சினிமா
Updated: 15:07 GMT, May 16, 2018 | Published: 15:07 GMT, May 16, 2018 |
0 Comments
1037
This post was written by : Vithushagan

என்னை அறிந்தால்’ படத்தை அடுத்து மீண்டும் அஜித்தை வைத்து ஒரு படத்தை கௌதம் மேனன் இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அஜித், கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான படம் ‘என்னை அறிந்தால்’. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் மீண்டும் இவர்கள் இருவரும் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது கௌதம் மேனன் ‘துருவ நட்சத்திரம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்து வருகிறார். அத்துடன் தனுஷை வைத்து ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இந்தப் படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில், கவுதம்மேனன் அஜித்துக்காக ஒரு கதை தயார் செய்து வைத்துள்ளாராம். அதை சொல்வதற்கு அஜித்திடம் நேரம் கேட்டிருக்கிறாராம்.

நடிகர் தற்போது ‘விஸ்வாசம்’ படத்தில் பிஸியாக நடிதது வருகிறார். ‘விஸ்வாசம்’ படம் கிராமம் சார்ந்த கதை என்பதால் அடுத்து கௌதம் மேனன் படத்தில் அஜித் நடிக்க வாய்ப்பு இருக்கிறதாம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)