Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா சிறைச்சாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விஜயம்

In இலங்கை
Updated: 16:55 GMT, May 16, 2018 | Published: 16:55 GMT, May 16, 2018 |
0 Comments
1395
This post was written by : Litharsan
வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்வதற்காக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.தியகராஜா ஆகியோர் நேரடியாக சென்று சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கைதிகளுக்கு எதிராக பல்வேறு அநீதிகள் இடம்பெறுவதாக அண்மையில் கைதி ஒருவர் வவுனியா நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். இதனையடுத்து கைதிகளிற்கு எதிராக இடம்பெறும் அநீதிகளை கண்டித்தும் சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் பாவனை நடைபெறுவதாகவும் கூறி சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து சில கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலையில் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் சிறைக்கைதிகள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனவே, இவ்விடயங்கள் தொடர்பாக கைதிகளுடனும் சிறைச்சாலை அதிகாரிகளுடனும் கலந்துரையாடியிருந்தனர். இந்நிலையில் வவுனியா சிறைச்சாலைக்குள் போதைபொருள் பாவனையுள்ளதாக கைதிகள் தெரிவித்தாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களிற்கு தெரிவித்தார்.
இதேவேளை சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் அடிப்படையில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் 55 கைதிகளை மாத்திரமே  தங்க வைக்க முடியும் எனவும், இந்நிலையில் சுமார் 258 பேரை தங்க வைக்கின்ற நிலைமை  காரணமாக இட வசதியின்மை   ஏற்பட்டமையால் சிறைக்கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதும் அது நிறுத்தப்பட்டதாக சிறைக்கைதிகள் தெரிவித்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)