Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எரிபொருள் விநியோகத்தில் ஊழல்: விரைவில் சட்ட நவடிக்கை – அர்ஜூன

In இலங்கை
Updated: 17:09 GMT, May 16, 2018 | Published: 17:09 GMT, May 16, 2018 |
0 Comments
1165
This post was written by : Litharsan

எரிபொருள் விலை அதிகரித்த தினத்தன்று இடம்பெற்ற எரிபொருள் விநியோகத்தில் ஒரு கோடி ரூபா நட்டம் ஏற்படும் விதத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். எனவே குற்றவாளிகளுக்கு பாரபட்சமின்றி விரைவில் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இன்று (புதன்கிழமை) கம்பஹா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 10 ஆம் திகதி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலைகளான கொலன்னாவை மற்றும் முத்துராஜவெலவிலிருந்து 74 எரிபொருள் கொள்கலன்கள் எரிபொருளை நிரப்பி, விநியோகித்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கமைய கொலன்னாவை களஞ்சியசாலையில் இருந்து 55 எரிபொருள் கொள்களன்களும், முத்துராஜவெலவிலிருந்து 22 எரிபொருள் கொள்களன்களும் வெளியேறியுள்ளன.
இதனால் கொலன்னாவைக்கு ரூபா 6,580,200 நட்டமும், முத்துராஜவலவிலிருந்து ரூபா 2,468,400 நட்டமும் ஏற்பட்டடுள்ளது.

முதற்கட்ட விசாரணனைக்கமைய அன்றைய தினம் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களும் பாரிய தொகையளவு எரிபொருள் கேள்வியை விடுத்திருந்தது. இந்த ஊழல் மோசடி சாதாரண விதிமுறைகளை மீறி இடம்பெற்றுள்ளது.

ஒருவாரமாக எரிபொருள் நிரப்பாமல் இருந்த சில எரிபொருள் நிலையங்கள் அன்றைய தினம் எரிபொருளை நிரப்பியுள்ளது.

ஆகவே இதில் ஈடுபட்ட நபர்களை கண்டிறிவதற்கு நாங்கள் விசாரணையை ஆரம்பித்துள்ளோம். இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)