Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெரும்பான்மையை நீரூபிக்க பா.ஜ.க.வுக்கு காலக்கெடு – எடியூரப்பாவிற்கு தடையில்லை – உச்ச நீதிமன்றம்

In இந்தியா
Updated: 03:08 GMT, May 17, 2018 | Published: 03:08 GMT, May 17, 2018 |
0 Comments
1122
This post was written by : Litharsan

கர்நாடகாவில் ஆட்சியமைக்க பா.ஜ.க. கட்சியின் எடியூரப்பா பதவியேற்பதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தது. அந்த வழக்கில் அவர் பதவியேற்பதற்கு தடைவிதிக்க முடியாது உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவித்தலை நேற்றிரவு (வியாழக்கிழமை) இடம்பெற்ற சிறப்பு வழக்கு விசாரணையின் பின்னர் நீதிமன்றம் அறிவித்தது.

அண்மையில் கர்நாடகாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மத சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது.

எனினும் 104 இடங்களில் வென்ற பா.ஜ.க.வினர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சிக்கான உரிமையைக் கோரினர்.
இந்நிலையில், திடீர் திருப்பமாக பா.ஜ.க.வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்றிரவு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் நாளை காலை 9 மணிக்கு எடியூரப்பா பதவி ஏற்பார் என்பதால் அதற்கு முன்னதாக வழக்கை விசாரிக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து காங்கிரஸ் அளித்த மனு குறித்து அரை மணி நேரத்திற்கும் மேலாக உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா, பதிவாளருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது காங்கிரஸ் அளித்த மனுவை இரவே விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டது.

அப்போது ஆளுநர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் துஷார் மேத்தா, அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார், ஆளுநர் உத்தரவில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது என வாதாடினார்.

காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதாடி, பல்வேறு வாதங்களை முன்வைத்தார்.

இந்நிலையில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 7 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டதுடன், எடியூரப்பா பதவியேற்பதைற்குத் தடை விதிப்பதையும் விலக்கிக்கொண்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg