Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆந்திராவில் படகு கவிழ்ந்ததில் 14 பேர் உயிரிழப்பு: 10 பேரைக் காணவில்லை

In
Updated: 03:33 GMT, May 17, 2018 | Published: 03:33 GMT, May 17, 2018 |
0 Comments
1073
This post was written by : Litharsan

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளனாதில் 14 பேர் உயிரிழந்துள்ளதோடு, 10 பேர் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள தேவிபட்டணத்திலிருந்து நேற்று (புதன்கிழமை) மாலை கொண்டமொதலு பகுதியை நோக்கிச் சென்ற படகே விபத்துக்குள்ளானது.

கோதாவரி ஆற்றில் படகு சென்று கொண்டிருந்த போது கடும் மழையுடன் காற்று வீசியுள்ளது. இதனால் படகு ஆற்றில் கவிழ்ந்ததாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த படகில் 40 பேர் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. படகில் பயணித்த சில பேர் நீந்தி கரை திரும்பிய நிலையில், ஏனையோரை மீட்கும் பணிகள் இடம்பெற்றுவருகின்றன.

இதுவரை 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் உயிரிழந்த14 பேரின் உடலை மீட்புப் படையினர் கைப்பற்றினர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg