Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.பி.எல் தொடரில் அதிரடியால் சாதனை படைத்த வீரர்!

In
Updated: 03:45 GMT, May 17, 2018 | Published: 03:45 GMT, May 17, 2018 |
0 Comments
1163
This post was written by : Puvanes

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான லோகேஷ் ராகுல் 11ஆவது ஐ.பி.எல் தொடரில் புதிய சாதனை வீரராக முத்திரைப் பதித்துள்ளார்.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல் மொத்தமாக 652 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதன்மூலம் செம்மஞ்சள் நிறத் தொப்பியையும் பெற்றுக்கொண்டார்.

அத்தோடு 11 ஆவது ஐ.பி.எல் தொடரில் 600 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் ராகுல் படைத்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) மும்பை அணியுடன் பலப்பரீட்சையில் ஈடுபட்ட பஞ்சாப் அணி போராட்டத்தின் மத்தியில் தோல்வியைத் தழுவியது. குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை 186 ஓட்டங்களைக் குவித்தது.

பதிலுக்கு ஆடிய பஞ்சாப் 183 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது. எனினும் பஞ்சாப் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ராகுல் 94 ஓட்டங்களைக் குவித்து அதிரடியைக் காட்டியிருந்தார்.

இதேவேளை, கடந்த ஐ.பி.எல் தொடரில் 38 போட்டிகளில் மொத்தமாக 725 ஓட்டங்களைக் பெற்ற ராகுல் இம்முறை 13 போட்டிகளில் மாத்திரம் 652 ஓட்டங்களைக் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று நடப்பு ஐ.பி.எல் தொடரில் 32 ஆறு ஓட்டங்களை அடித்துள்ள ராகுல், அதிக ஆறு ஓட்டங்களை அடித்துள்ள வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். மேலும் 65 நான்கு ஓட்டங்களை அடித்து அதிக நான்கு ஓட்டங்களை அடித்த வீரர்களின் பட்டியலிலும் முதலிடத்தில் ராகுல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)