Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்தை மீறியுள்ளார் – காங்கிரஸ் குற்றச்சாட்டு

In இந்தியா
Updated: 07:11 GMT, May 17, 2018 | Published: 03:54 GMT, May 17, 2018 |
0 Comments
1082
This post was written by : Litharsan

கர்நாடகாவில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அழைத்ததன் மூலம், அரசியலமைப்பு சட்டத்தை மாநில ஆளுநர் மீறியுள்ளாரென காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், கபில் சிபில் ஆகியோர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைக்கும்படி பா.ஜ.க.வுக்கு கர்நாடக ஆளுநர் இன்று அழைப்பு விடுத்தார்.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஆட்சி அமைக்கும்படி பாஜகவுக்கு கர்நாடக ஆளுநர் நேற்று (புதன்கிழமை) அழைப்பு விடுத்தார்.

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தளம் இணைந்து போதிய பெரும்பான்மை பலம் உள்ளதை ஆளுநரிடம் நிரூபித்துள்ளோம். இருப்பினும் பா.ஜ.க.வுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இது அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய செயலாகும். பெரும்பான்மை உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், 117 பேரின் ஆதரவு கடிதத்தை குமாரசாமி வழங்கியுள்ளார். ஆனால், அவருக்கு அழைப்பு விடுக்காதது ஏன்?

மாநில ஆளுநர் என்பவர் அரசியலமைப்பு சட்டப் பதவியில் உள்ளவர். அவர் சட்டவிரோதமான பாதையில் செல்லக் கூடாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மதித்து, பெரும்பான்மை உள்ள அணியையே அழைத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)