Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹரியின் திருமணத்திற்கு தயாராகும் சென்.ஜோர்ஜ் தேவாலயம்

In
Updated: 12:25 GMT, May 17, 2018 | Published: 12:25 GMT, May 17, 2018 |
0 Comments
1108
This post was written by : Elakkiya

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கில் திருமண நிகழ்வுக்காக உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் திருமணம் நடைபெறவுள்ள வின்ட்ஸர் தேவாலயமும் திருமண நிகழ்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.

இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கில் திருணம் நாளை மறுதினம் வின்ட்ஸரில் அமைந்துள்ள சென் ஜோர்ஜ் தேவாலயத்தில் நடைபெறவுள்ளது.

திருமண நிகழ்வின் போது, உலகளாவிய பார்வையாளர்களுக்கு மத்தியில் பாடல் இசைப்பதற்காக இந்த சிறுவர்கள் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

11 வயதுடைய லியொ மில்ஸ் என்ற சிறுவனும், 9 வயதுடைய நாதன் மக்கரோ என்ற சிறுவனும் திருமண நிகழ்வை மிகவும் உற்சாகத்துடன் எதிர்பார்த்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இவர்கள் இருவரும் 12 பேர் கொண்ட இந்த பாடகர் குழுவில் மிகவும் இளையவர்கள்.

இவ்வாறிருக்க அரச திருமண நிகழ்வில் பாடுவோம் என்று நினைக்கவில்லை என தனது உற்சாகத்தை லியொ மில்ஸ் பகிர்ந்து கொள்கிறார்.

அது போலவே மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும் தான் அதிஷ்டசாலி எனவும் 9 வயது சிறுவனான நாதன் மக்கரோ தெரிவிக்கிறார்.

மேலும் பெற்றோர் தன்னை நினைத்து பெருமைப் படுவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)