Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐக்கிய நாடுகள் சபை ‘குழம்பியுள்ளது’: துருக்கி ஜனாதிபதி

In உலகம்
Updated: 04:33 GMT, May 17, 2018 | Published: 04:33 GMT, May 17, 2018 |
0 Comments
1087
This post was written by : Johnson paiva

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன எல்லையான காஸாவில் இடம்பெற்ற வன்முறையில் ஐ.நா ‘குழம்பியுள்ளது’ என துருக்கி ஜனாதிபதி  Tayyip Erdogan தெரிவித்துள்ளார்.

புனித ரமழான் மாதத்திற்கு முதல்நாளான நேற்று (புதன்கிழமை) இரவு ரமழான் விருந்தில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன எல்லையான காஸாவில் இடம்பெற்ற வன்முறையினை சர்வதேசம் சரியான முறையில் அணுகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் “காஸாவில் நடைபெற்ற படுகொலைச் சம்பவங்கள் துருக்கி மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான நல்லுறவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” எனவும் “துருக்கியில் இருந்த இஸ்ரேல் நாட்டு மூத்த இராஜதந்திரியைக் கடந்த செவ்வாய்க்கிழமை துருக்கி வெளியேற்றியநிலையில் இஸ்ரேலும் துருக்கி நாட்டு மூத்த இராஜதந்திரியை வெளியேற்றியுள்ளது” எனவும் கூறியுள்ளார்.

அமெரிக்கத் தூதரகத்தினை ஜெருசலேமிற்கு இடமாற்றியமை குறித்து ஏற்பட்ட வன்முறையில் இஸ்ரேல் படையினரால் 60 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்த நாடுகளில் துருக்கி முதன்மையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)