Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய கட்சியைத் தொடங்கிய முன்னாள் நீதிபதி

In இந்தியா
Updated: 04:43 GMT, May 17, 2018 | Published: 04:43 GMT, May 17, 2018 |
0 Comments
1071
This post was written by : Litharsan

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் புதிய கட்சியொன்றைத் தொடங்கியுள்ளார்.

நேற்று (புதன்கிழமை) மனித உரிமை அமைப்புகளின் மாநாட்டில் கலந்துகொண்டபின்னர் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்தித்தப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் “ஊழலுக்கு எதிரான கட்சி” என்று தனது கட்சிப் பெயரையும் அறிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது கட்சிப் பெயரை முறைப்படி பதிவுசெய்யவுள்ளேன். அத்துடன் அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள மக்களவைத் தேர்தலில் எனது கட்சி சார்பில் பெண் வேட்பாளர்களைக் களமிறக்கத் தீர்மானித்துள்ளேன்.

நாட்டில் ஊழலை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதே எனது கட்சியின் நோக்கம்” என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் கர்ணன். இவர் மீது அவமதிப்பு வழக்குத் தொடர்ந்த உச்ச நீதிமன்றம், அவருக்கு 6 மாதகால சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg