Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காஸா வன்முறைச் சம்பவங்கள்: பரிசுத்த பாப்பரசர் கடும் கண்டனம்

In உலகம்
Updated: 05:13 GMT, May 17, 2018 | Published: 05:13 GMT, May 17, 2018 |
0 Comments
1155
This post was written by : Johnson paiva

காஸா எல்லையில் ,இடம்பெற்றுவரும், வன்முறைச் சம்பவங்கள் குறித்து பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சென் பீட்டர் சதுக்கத்தில் விசேட திருப்பலி ஒன்றை ஒப்புக்கொடுத்த பாப்பரசர் இதற்கான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

ஜெருசலேமில் அமெரிக்கத் தூதரகம் திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த திங்கட்கிழமை காஸா எல்லையில் பலஸ்தீனர்களால் நடத்தப்பட்ட போராட்டத்தில், இஸ்ரேலியப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன்போது, பலஸ்தீனர்கள் 59 பேர் கொல்லப்பட்ட நிலையில் அவர் இக்கண்டனத்தினை வெளியிட்டுள்ளார்.

 கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலேமிற்கு நகர்த்துவதற்கான முடிவினை அறிவித்தபோது எருசலேமின் “நிலைமை” மதிக்கப்பட வேண்டும் எனவும்  மத்திய கிழக்கில் ஏற்படும் பதற்றம் உலக நாடுகளுக்கிடையிலான மோதல்களை மேலும் அதிகரிக்கும் எனவும்  பரிசுத்த பாப்பரசர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)