Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தோல்வியை தாங்கமுடியாத பிரபல டென்னிஸ் வீராங்கனை செய்த செயல்!

In டெனிஸ்
Updated: 05:13 GMT, May 17, 2018 | Published: 05:13 GMT, May 17, 2018 |
0 Comments
1142
This post was written by : Puvanes

இத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடரில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றில் வெற்றிப் பெற்றுள்ளார்.

ரோமில் நடைபெற்று வரும் இத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டிகள் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றன.

இதில் ஒரு போட்டியில் உலகின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலெப் மற்றும் ஜப்பான் வீராங்கனை நோமி ஒசாகா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். விறுவிருப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 6-1, 6-0 என்ற நேர்செட்டில் ஹாலெப் வெற்றிப்பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானார்.

இதேவேளை மற்றொரு ஆட்டத்தில் கரோலினா பிளிஸ்கோவா 6-3, 3-6, 5-7 என்ற செட் கணக்கில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

இந்த தோல்வியை பொறுத்துக்கொள்ள முடியாத கரோலினா பிளிஸ்கோவா நடுவர் அமர்ந்திருந்த ஆசனத்தை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். மேலும் அவர் நடுவருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg