Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எடியூரப்பாவுக்கு எதிராக முன்னாள் முதல்வர் போராட்டம்!

In இந்தியா
Updated: 05:38 GMT, May 17, 2018 | Published: 05:38 GMT, May 17, 2018 |
0 Comments
1100
This post was written by : Litharsan

கர்நாடகாவில் பெரும்பான்மையைப் பெறாமல் பா.ஜ.க. ஆட்சியமைத்ததைக் கண்டித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா தலைமையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கர்நாடகா சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (புதன்கிழமை) இந்தப் போராட்டம் நடைபெற்றது.

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 104 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியான பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா இன்று பதவியேற்றார்.

இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சித்தராமையா குறித்த போராட்டத்தில் ஈடுபட்டார்.

இப்போராட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால் மற்றும் கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg