Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இன்னொரு நெடுவாசலா? – எச்சரிக்கும் கரூர் விவசாயிகள்!

In இந்தியா
Updated: 07:02 GMT, May 17, 2018 | Published: 07:01 GMT, May 17, 2018 |
0 Comments
1085
This post was written by : Litharsan

கரூர் மாவட்டத்தில் கரையோரக் கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் முயற்சிகள் இடம்பெறுவதாக மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்கள்.

அதனை எதிர்த்து நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) பா.ம.க மாநில துணை பொதுச் செயலாளர் பாஸ்கரன் தலைமையில், குறித்த கிராம விவசாயிகள் மற்றும்  பெண்கள் அணிதிரண்டு மாவட்ட ஆட்சியாளரிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை நெடுவாசல் பிரதேசத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அந்தத் திட்டத்தை கரூர் கிராமத்தில் மேற்கொள்ளப்படுவதாக அந்தக் கிராம தெரிவிக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல், தஞ்சை மாவட்டத்தில் உள்ள கதிராமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் வாயுவை எடுக்க முயன்றதால், அங்குள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதோடு போராட்டங்களையும் நடத்தினர்.

அதனால் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிறுவனம் பின்வாங்கிய நிலையில், வேறு இடம் கேட்டு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியது.

இதனிடையே, கரூர் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில், ஆழ்குழாய் போட்டு ஆய்வு செய்ததால், அந்தப் பகுதி மக்கள் கொந்தளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

கரூர் மாவட்டத்தில் காவிரிக் கரையோரம் உள்ள கிராமங்களான அரங்கநாதன்பேட்டை, நெரூர், தென்பாகம் உள்ளிட்ட கிராமங்களில், இரவு நேரத்தில் திடீரென இயந்திரங்கள் வந்து ஆழ்குழாய் கிணறுகள் தோண்டி ஆய்வுகளை மேற்கொள்வதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

அவ்வாறு இயற்கை வளங்களை எடுக்க முயன்றால், குறித்த பகுதி சஹாரா பாலைவனமாக மாறிவிடும் எனத்தெரிவித்துள்ள மக்கள், இதனைத் தடுக்க உயிரைக் கொடுக்கவும் தயங்கமாட்டோம் என எச்சரித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)