Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இனப்படுகொலை- சர்ச்சைக்குரிய கருத்திற்கு பதிலளிப்பாரா மைத்திரி?

In இலங்கை
Updated: 07:48 GMT, May 17, 2018 | Published: 07:48 GMT, May 17, 2018 |
0 Comments
1118
This post was written by : Risha

இனப்படுகொலைகளை தமிழர்கள் நினைவுகூருவதில் தவறில்லை என்ற அமைச்சரவை இணைப்பேச்சாளர் ராஜித சேனாரத்னவின் கருத்து, அரசாங்கத்தின் நிலைப்பாடா என்ற சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில், ராஜிதவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான, அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ நிலைப்பாட்டை தாமதமின்றி வெளிப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தப்பட்டுள்ளார்.

ராஜிதவின் கருத்திற்கு கடும் அதிருப்தியை தெரிவித்து தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம், ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கான கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”தனிநாடு கோரி பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட விடுதலை புலிகளுக்கும், சமூக மாற்றத்திற்காக அரசாங்கத்தில் புரட்சியை ஏற்படுத்த போராடிய மக்கள் விடுதலை முன்னணிக்கும் வித்தியாசத்தை உணர முடியாத ஒருவர் அமைச்சரவை இணைப்பேச்சாளராக விளங்குகின்றமை வருந்தத்தக்க விடயமாகும்.

இராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அவர் கூறுவதாயின், அவ்வாறு எத்தனை பேர் எங்கு வைத்து கொல்லப்பட்டனர் என்பதை அறிந்துக் கொள்ள ஆவலாக உள்ளோம்.

அதுமாத்திரமன்றி, இனப்படுகொலைகளை தமிழர்கள் நினைவுகூருவதில் தவறில்லை என்ற அவரது கருத்து இராணுவத்தினரை இழிவுபடுத்துவதாக அமைவதுடன், அமைச்சரவை பேச்சாளரின் கருத்து எம்மை வெறுப்படையச் செய்துள்ளது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg